×

நாளை நடைபெறும் பல்லடம் பொதுக்கூட்டத்தில் பிரதமருடன் எந்தெந்த கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு?.. பரபரப்பு தகவல்கள்

சென்னை: நாளை பல்லடம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் மேடை ஏறப்போகும் கூட்டணி கட்சித் தலைவர்கள் யார், யார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுக, பாஜ கூட்டணி உடைந்துள்ளதால், அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளை இழுக்க போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் த.மா.கா. இணைந்துள்ளது. அதனை அடிப்படையில் நாளை நடைபெறும் பல்லடம் நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன் பங்கேற்கிறார். பாமகவை பொறுத்தவரை பாஜகவா?, அதிமுகவா என தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பாஜக அணியில் இடம்பெறுவது உறுதியான நிலையில் மற்ற கட்சிகளுடன் தீவிரப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே பிரதமர் மோடி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில், நாளை (பிப்-27) நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். தேர்தல் நெருங்கும் நிலையில் நாளை பல்லடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் மேடை ஏறப்போகும் கூட்டணி கட்சித் தலைவர்கள் யார், யார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பல்லடம் மேடையில் பிரதமருடன் ஜான் பாண்டியன் பங்கேற்பார் என தெரிகிறது. பாமகவும் பாஜக அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

மீண்டும் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தால் ஒன்றிய அமைச்சர் பதவியை பாமக கேட்பதாக கூறப்படுகிறது. புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி பல்லடம் மேடையில் இடம் பெறுவாரா அல்லது அதிமுகவுடன் கூட்டு சேர்வாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

The post நாளை நடைபெறும் பல்லடம் பொதுக்கூட்டத்தில் பிரதமருடன் எந்தெந்த கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு?.. பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Balladam General Meeting ,Chennai ,Modi ,Balladam ,Atamuka ,Baja alliance ,BJP ,Dinakaran ,
× RELATED “இவர்களின் அமைதி ஆபத்தானது”: பிரதமர்...